சொல் பொருள்
(வி) 1. கணு தோன்று, சிம்புவிடு, 2. விழித்துப்பார்,
சொல் பொருள் விளக்கம்
கணு தோன்று, சிம்புவிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shooting of bamboo splits
open the eyes;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிலம்பின் வெதிரத்து கண்விடு கழை கோல் – ஐங் 278/1 மலைச் சரிவிலிருக்கும் மூங்கிலின், கணுக்கள் விட்டுக் கழையாக வளர்ந்திருக்கும் கோலின் மேல் – கண் – கணு – மூங்கிலின் கணுவினின்றும் சிறுசிறு கோல்கள் தோன்றி நீளுதல் இயல்பு கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 205 கடவுள் (வாழும்)- பெருமையுடைய (மேரு)மலை – (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்