சொல் பொருள்
கட்டைகத்தரிப்பு – பிளப்பு ; பிரிப்பு – உடல்
சொல் பொருள் விளக்கம்
கத்தரி, கத்தரிக்கோல் என்பவை கத்தரிக்கும் கருவிகள். கத்தரித்தல் தொழிற்பெயர். ஒன்றை இரண்டாய் வெட்டிப் பிரிப்பது கத்தரி. அது செய்யும் தொழிலை உட்கொண்டு. “எங்கள் நட்பை அல்லது உறவை அவன் கத்தரித்து விட்டான்” என்பது வழக்கில் உள்ளது. “கத்தரிக்கவும் அவனுக்குத் தெரியும்; மூட்டவும் தெரியும்” என்பது பிளக்கவும், பிளந்தாரைக் கூட்டவும் வல்லாரைக் குறிக்கும் வழக்குச் சொல். ஒருவருக்குத் தம் முயற்சியால் கிடைக்க இருந்த வேலை மற்றொருவர் கத்தரியிட்டதால் கிடையாது போனதைச் சுட்டுவார் திரு.வி.க. (வாழ்க்கைக் குறிப்புகள்)
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்