சொல் பொருள்
கத்தி – குத்துதல் கிழித்தல் அறுத்தற்குப் பயன்படுத்தும் கருவி.
கப்படா – கத்திப்பட்டா எனப்படும் பட்டையானதும் நீண்டதுமாய்க் கத்தி போல் பயன்படுத்துதற்காம் பெரிய கருவி.
சொல் பொருள் விளக்கம்
‘கத்தி கப்படாவுடன் வந்தான்; கத்தி கப்படாக்களால் தாக்கினான்’ என்பவை குற்றத்துறை நடவடிக்கைகள். கத்தியினும் நீண்டதும் பட்டையாய் அமைந்ததும் வாளினும் கனம் குறைந்ததும் நீளம் குறைந்ததுமாகிய கருவி. கத்திப்பட்டா என்பது ஊடு எழுத்துக்கள் சிலவற்றை விட்டுக் ‘கப்படா’ என வழக்கில் உள்ளதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்