Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சங்கத் தமிழகத்தின் ஒரு பகுதி, 2. மது, 

சொல் பொருள் விளக்கம்

சங்கத் தமிழகத்தின் ஒரு பகுதி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a part of land in Sangam Tamil country

a kind of intoxicating liquor

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு – புறம் 258/2,3

முற்ற விளைந்த இனிய மதுவையுடைய கந்தாரம் என்னும் வேற்றுப்புலத்து
தான் கொண்டுவந்து நிறுத்திய நிரையைக் கள் விலைக்கு நேராகக் கொடுத்து உண்டு
– கந்தாரம் என்பது காவிரிக்கரையைச் சார்ந்த ஓர் ஊர். – ஔவை.சு.து.உரை, விளக்கம்

தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு – புறம் 258/2,3

தீம்கந்தாரம் – இனிய கந்தாரம் என்னும் பெயரையுடைய மதுவையுடைய வேற்றுப்புலத்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *