Skip to content

சொல் பொருள்

(பெ) 1. யானை கட்டும் தறி, 2. தெய்வம் உறையும் தறி,  3. பற்றுக்கோடு, ஆதரவு,

துண்டம் என்னும் பொருள் தரும் வட்டார வழக்கு நெல்லை, முகவை வழக்காம்

சொல் பொருள் விளக்கம்

கட்டுத் தறியைக் கந்து (தூண்) என்பர். கட்டற்ற ஒன்றைக் கந்தழி என்பது பண்டை வழக்கு. ஒரு பெருந்துணி கிழிந்து போனால் கந்தல் ஆகிவிட்டது என்பர். “கஞ்சிக்கும் கந்தைக்கும் படும்பாடு, என்னபாடு?” என்பர் வறியவர். இவை பொது வழக்குகள். மேகம் பிரிந்து தனித்தனியே திரண்டு நிற்றலை “கந்து கந்தாக நிற்கிறது” என்றும் கூட்டம் கந்து கந்தாகக் கலைந்தோடியது என்றும். துண்டம் என்னும் பொருள் தரும் வட்டார வழக்கு நெல்லை, முகவை வழக்காம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

post to tie an elephant to, post representing a deity which is worshipped, support

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 383

கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;

மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 226

ஊர்ப்பொது மரத்தடியிலும், அம்பலத்திலும், திருவருள்குறியாக நடப்பட்ட தறியிடத்திலும்

புலம் கந்து ஆக இரவலர் செலினே
வரை புரை களிற்றொடு நன்கலன் ஈயும் – அகம் 303/8,9

தம் அறிவையே நம்பி அதனை ஆதரவாகக் கொண்டு இரப்போர் சென்றால்
மலை போன்ற களிறுகளுடன் நல்ல அணிகலன்களைக் கொடுக்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *