சொல் பொருள்
(பெ) 1. நாழிகை வட்டில், 2. நீர் வைக்கும் குறுகிய வாய் உள்ள பாத்திரம்
சிறுவிழா என்னும் பொருளில் செட்டிநாட்டு வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
காலம் காட்டும் கருவிப் பெயராகவும் காலப் பெயராகவும் கன்னல் என்பது முன்னரே வழக்கில் இருந்தது. அக் கன்னல் சிறுவிழா என்னும் பொருளில் செட்டிநாட்டு வழக்காக உள்ளது. அது, மற்றைப் பெருவிழாக்களைப் போல் திங்கள், கிழமை, நாள் என்னும் அளவு பெறாமல் சிற்றளவுப் பொழுதில் நிகழும் விழாவுக்கு ஏற்பட்டு அதன் பின்னர்ச் சிறுவிழாப் பொருளில் ஆட்சி பெற்றிருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hourglass
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப – முல் 55-58 பொழுதை அளந்து அறியும், உண்மையே பேசுகின்ற மக்கள் (அரசனை)வணங்கியபடி காணும் கையையுடையவராய், விளங்க வாழ்த்தி, ‘(திரை)எறிகின்ற கடல்(சூழ்ந்த) உலகத்தே (பகைவரை)வெல்வதற்குச் செல்கின்றவனே, உனது சிறிதளவு நீரைக்கொண்ட கடிகைப் பாத்திரம் (காட்டும் நேரம்)இத்துணை’ என்று சொல்ல கல்லென் துவலை தூவலின் யாவரும் தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65 ‘கல்’லென்கிற ஓசையுடன் தூறல் (நீர்த்திவலைகளைத்)தூவுவதால், ஒருவருமே குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்