சொல் பொருள்
(பெ) யானைக்கன்று,
நெல்லை குமரி முகவை மாவட்டங்களில் குழந்தையரைக் குறிக்கும் சொல்லாக உள்ளது.
யானையின் இளங்கன்றைக் கயந்தலை என்பது தொன்மைச் செய்யுள் வழக்கு
சொல் பொருள் விளக்கம்
யானையின் இளங்கன்றைக் கயந்தலை என்பது தொன்மைச் செய்யுள் வழக்கு. ‘கன்று கயந்தலை’ மீமிசைச்சொல். அல்லது ஒரு பொருள் பன்மொழி. கயந்தலை என்பது நெல்லை குமரி முகவை மாவட்டங்களில் குழந்தையரைக் குறிக்கும் சொல்லாக உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
young elephant, having a tender head;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை – கலி 11/8 உடுக்கை போன்ற கால்களையுடைய கன்று கலக்கிய சிறிது நீரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்