சொல் பொருள்
கரியாக்கல் – அழித்தல், சுட்டெரித்தல்
சொல் பொருள் விளக்கம்
கரியாக்குவோர் அக்கரிக்காக எரிக்கக்கூடாத உயர் மரத்தையும் தீ மூட்டி எரிப்பதுண்டு. அவர்களுக்குத் தேக்கானால் என்ன, சந்தனம் ஆனால் என்ன, வேண்டுவது கரி. அவ்வளவே. அது போல் சிலர் எளியதும் வேண்டாததுமாகிய தம் செலவுக்காக விற்கக் கூடாத அரிய பொருள்களையும் விற்றுவிடுவது உண்டு. அதனைக் குறிப்பது கரியாக்கல் என்னும் வழக்கம். “போன இடத்தைக் கரியாக்காமல் போகமாட்டானே” என்பது கரியாக்குவானுக்குத் தரும் சான்றுரை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்