கருனை என்பது எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுப்பண்டங்கள்
1. சொல் பொருள்
(பெ) பொரிக்கறி, பொரித்த பண்டம்.
2. சொல் பொருள் விளக்கம்
எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுப்பண்டங்கள்….வறுவல், அப்பளம், வடாம், வடை, பச்சி, பொரித்தெடுத்தக் காய்கறித் துண்டுகள் போன்றவை கருனை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
any fried dish
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு – நற் 367/3
கரிய கண்போன்ற பொறிக்கறியுடன், செந்நெல்லின் வெண்மையான சோற்றை
பரல் வறை கருனை காடியின் மிதப்ப – பொரு 115
பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி – புறம் 395/37
வளமான பொரிக்கறியையும், சூட்டிறைச்சியையும் நிரம்ப உண்டு,
மண்டைய கண்ட மான் வறை கருனை/கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர – புறம் 398/24,25
கலத்தில் இருந்த மான் இறைச்சித் துண்டுகளை வறுத்துப் பொரித்த கறியையும்,

குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்