சொல் பொருள்
கறிவேப்பிலை – பயன்கொண்டு தள்ளல்
சொல் பொருள் விளக்கம்
கறிவேப்பிலை தாளிதத்திற்குப் பயன்படும் இலை. ஊட்டச் சத்துடன் சுவையும் மணமும் உடையது. அதனைத் தாளித்துக் கொட்டினால் கறிக்கும் தனிச் சுவையுண்டாகின்றது. ஆயினும் அதனை எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு உண்பதே வழக்கமாக உள்ளது. அதில் இருந்து “என்னைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொண்டார்” என்று பழி கூறுவது உண்டாயிற்று. தங்கள் பயனே குறியாகக் கொண்டவர்கள் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை விளக்குபவற்றுள் கறிவேப்பிலைக்கும் தனி இடம் உண்டாகி விட்டது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்