சொல் பொருள்
கலகம் – கைகலப்பால் உண்டாகும் சண்டை, கருவிகள் கலத்தலும் கலகத்தில் இடம் பெறும்.
கச்சரா – கலகத்திற்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கச்சேரிக்கு காவல் நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றுக்குச் செல்லுதல்.
சொல் பொருள் விளக்கம்
“கலகம் கச்சரா என்று திரிபவன் உடலை வளைத்து வேலை பார்ப்பானா? கலகம் கச்சரா இல்லாமல் இருக்கமாட்டானா அவன்?” என்பன போன்றவை நாட்டுப் புறங்களில் கேட்கும் வழக்குகள். கச்சரா என்பது கச்சேரியின் திரிபு. அஃது உருதுச் சொல்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்