சொல் பொருள்
1. (வி) 1. ஒழுகு, 2. கண்ணீர் சொரி,
2. (பெ) 1. அழுகை, 2. கலக்கம், 3. கலங்கல் நீர், 4. ஒழுகுதல்,
சொல் பொருள் விளக்கம்
ஒழுகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shine forth, as beauty, weep, shed tears, weeping, perturbation, muddy water, puddle, shining as beauty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம் கலுழ் மேனி பாஅய பசப்பே – குறு 143/7 அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலைநோய். கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால் பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் – கலி 147/48,49 என்னை இவ்வாறு செயலிழக்கச் செய்தவனைப் பார்த்தால், கண்ணீர் சொரியும் கண்களால் மெதுவாக நோக்குவேன், தாழ்ந்து வரும் அவன் மேலாடையைப் பிடித்துக்கொள்வேன், பருவரல் எவ்வம் களை மாயோய் என காட்டவும்காட்டவும் காணாள் கலுழ் சிறந்து பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப – முல் 21-23 துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’, என்று காட்டியும் காட்டியும் உணராளாய், அழுகை மிக்கு, பூப்போலும் மையுண்ட கண்கள் (தாரையாகச் சொரியாது)தனித்த கண்ணீர் முத்து துளிப்ப கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி – கலி 134/13 கவலைகொண்ட நெஞ்சத்தினளாய் நான் மனம் கலக்கம்கொள்ள, கடலைப் பார்த்து பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ் – குறு 200/1 மழைபெய்த குன்றத்தில் மலர் மணக்கின்ற குளிர்ந்த கலங்கல்நீரின் அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண் – அகம் 295/20 அழகு ஒழுகுதலைக் கொண்ட சிவந்த கடையினையுடைய குளிர்ந்த கண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்