சொல் பொருள்
(பெ) களாப்பழம்,
சொல் பொருள் விளக்கம்
களாப்பழம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fruit of carissa spinarum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 36,37 களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும், வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை இளம் பிறை அன்ன கோட்ட கேழல் களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/1,2 இளம்பிறையைப் போன்ற கொம்பினையுடைய காட்டுப்பன்றி களங்கனியைப் போன்ற தன் பெண்பன்றியினைப் புணர்ந்திருக்கும் களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் – புறம் 145/5 களாப்பழம் போன்ற கரிய கோட்டையுடைய சிறிய யாழை பார்க்க : களா
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்