களையெடுத்தல் என்பதன் பொருள்தீயரை அல்லது வேண்டாரை விலக்கல்,பயிர் நலத்துக்கும் பயிர்க் காப்புக்கும் செய்யும் செயலாம்
1. சொல் பொருள்
களையெடுத்தல் – தீயரை அல்லது வேண்டாரை விலக்கல்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Weeding, pulling out the weeds to help the plant growth. Moving wicked/toxic relations/people from a team/group/circle.
3. சொல் பொருள் விளக்கம்
உழவுத் தொழிலின் ஒரு பகுதி களையெடுத்தலாகும். களை கட்டல், களை பறித்தல் என்பனவும் அதுவே. கட்டல், கருவியால் வெட்டல் , எடுத்தல் பறித்தல் என்பவை கையால் செயலாற்றல், களை எடுத்தல் வினைக்குப் பிறபிற சொற்களும் உள.
களை (Weed) என்பது குறிப்பீட சூழலில் அமையும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் ஆகும்
களை எடுத்தல் பயிர் நலத்துக்கும் பயிர்க் காப்புக்கும் செய்யும் செயலாம். அதுபோல் தீயவர்களையும் கேடர்களையும் சுரண்டுபவர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் தேர்ந்தறிந்து தம் கூட்டில் இருந்து விலக்கிவிடும் தேர்ச்சி சிலர்க்கு உண்டு. அவர் செயல் களையெடுத்தல் எனப்படும். களையெடுக்கா விட்டால் சீராகாது என்பது வழக்கம். அடர்ந்து நீண்டுபோன முடிவெட்டுதலைக் களை வெட்டுதல் என்பது இந்நாள் நகர்ப்புற வழக்கில் உண்டு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்