சொல் பொருள்
கள்ளம் – களவு
கவடு – வஞ்சம்
சொல் பொருள் விளக்கம்
‘கள்ளம் கவடு இல்லாதவர்’ என்னும் இணைமொழி ‘களவும், களவுக்கு மூலமாம் வஞ்சமும் இல்லாதவர்’ என்பதை விளக்கும்.
கள்ளுதல் களவாடல். கவடு இரட்டையாகப் பிரிதல். ஓரெண்ணத்தை உள்வைத்து அதற்கு எதிரிடையானதை வெளிக்காட்டிச் செய்தல் கவடு அல்லது வஞ்சமாம். “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பது திருவருட்பா.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்