சொல் பொருள்
(பெ) ஒரு பாலை நிலச் செடி.
சொல் பொருள் விளக்கம்
ஒரு பாலைநிலச் செடி. கள்ளியில் பலவகை உண்டு.
திருகுகள்ளி, (Milk-hedge), இலைக்கள்ளி (Five tubercled spurge), சதுரக்கள்ளி (Square spurge)
மண்டங்கள்ளி (Cement plant), சப்பாத்துக்கள்ளி (Common prickly pear) என்பவை அவை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Spurge, Euphorbia;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரல் தலைபோகிய சிரல் தலை கள்ளி – நற் 169/4 பரல்கற்கள் நீண்டு கிடக்கின்ற பாலை நிலத்தில், மீன்கொத்திப்பறவையின் தலையைப் போன்ற கள்ளிச் செடி நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/9 விரல்களை நொடித்துவிட்டாற்போன்று காய்கள் வெடிக்கும் கள்ளி களரி ஓங்கிய கவை முள் கள்ளி – நற் 384/2 களர் நிலத்தில் உயரமாய் வளர்ந்த கவைத்த முள்ளைக் கொண்ட கள்ளி அம் கால் கள்ளி – குறு 16/5 அழகிய அடியைக் கொண்ட கள்ளி பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் நிலம் கரி கள்ளி – குறு 67/4,5 பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும் நிலம் கரிந்துள்ள கள்ளி பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு – குறு 154/5 பொரிந்த அடிமரத்தையுடைய கள்ளியின் வெடித்த காயையுடைய அழகிய கிளை கவை முள் கள்ளி பொரி அரை – புறம் 322/2 இரண்டாய்ப் பிளந்த முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப்பகுதி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்