சொல் பொருள்
(பெ) 1. கழற்சிக்காய், 2. கழங்கினை வைத்து மகளிர் ஆடும் விளையாட்டு, 3. வேலன் வெறியாட்டின்போது குறிபார்க்க உருட்டுவது
சொல் பொருள் விளக்கம்
கழற்சிக்காய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Molucca-bean
Play among girls with Molucca-beans
Divination with help of Molucca-beans by a soothsayer when possessed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம் – அகம் 126/12 கழற்சிக்காயின் விதையினைப் போன்ற பெரிய முத்துக்களுடன் சிறந்த அணிகளையும் பெறும். இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – அகம் 17/2 தன்னை ஒத்த இளைய தோழிகளுடன் கழங்கு விளையாட்டைச் சேர்ந்து ஆடினாலும் செல்வரின் வீட்டில் பொன்னால் ஆன கழங்கினைக் கொண்டு மகளிர் ஆடுவர். வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ கை புனை குறும் தொடி தத்த பைபய முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 333-335 வானத்தைத் தீண்டுகின்ற மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து, கையில் புனைந்த குறுந்தொடி அசையும்படி, மெல்ல மெல்ல முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும், பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு முருகு என மொழியும் வேலன் – ஐங் 249/1,2 புதிதாய் மணல் பரப்பிய வீட்டோரத்தில், கழங்குகளைப் போட்டுப்பார்த்து, அன்னையிடம் இது முருகனால் உண்டானது என்று சொல்கிறான் வேலன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்