சொல் பொருள்
கழற்றிவிடுதல் – பிரித்தல்
சொல் பொருள் விளக்கம்
ஒரு கட்டில் இருந்தோ, பிணைப்பில் இருந்தோ பிரித்தல் ‘கழற்றல்’ எனப்படும். அணிகலங்களைத் திருகுவாய், பூட்டு வாய் ஆகியவற்றிலிருந்து பிரித்தலும் கழற்றுதலே. இத்தகைய பருப்பொருளாம் கழற்றுதல், ஒரு நிகழ்ச்சியில் இருந்தோ, கூட்டத்தில் இருந்தோ, சிக்கலில் இருந்தோ உறவு நட்பு ஆகியவற்றில் இருந்தோ தம்மைப் பிரித்துக் கொள்ளுதலும் கழற்றுதலாக வழக்கில் ஊன்றியது. “அவன் முழுதாகத் தன்னை நம்மிடமிருந்து கழற்றிக் கொண்டு விட்டான்” என்பது பேச்சு வழக்கு. காரியம் முடிந்தவுடன் கழற்றிக் கொண்டான்” என்பது பெரு வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்