Skip to content

சொல் பொருள்

(வி) 1. பிதுங்கு, 2. நெகிழ்ந்து நீங்கு, 2. (பெ) 1. வீரக்கழல், 2. கழற்சிக்காய்,  3. கால் மோதிரம், 4. காற்சிலம்பு,

சொல் பொருள் விளக்கம்

பிதுங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bulge out, protrude, become loose, Anklet given as a token of honour to a warrior, molucca bean, toe ring, anklet

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49

பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான

கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின் – மலை 577

அணிகலன்களை அள்ளித்தரக் கவிழ்ந்த இறுக்கமாக இல்லாத தோளணியுடைய பெரிய கைகளில்

தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395

இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட வீரக்கழல் அணிந்த காலினையுடைய மழவரின்

கழல் கனி வகுத்த துணை சில் ஓதி – புறம் 97/23

கழற்சிக்காயின் விதையால் வகுக்கப்பட்ட இனமாகிய சிலவாகிய கூந்தல்

இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர்
கட்டுவட கழலினர் மட்டு மாலையர் – பரி 12/23,24

ஆணியிட்டுச் சேர்க்கப்படும் வளையல்களோடு, செறிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும்,
கட்டுவடத்தோடு, கால்விரலில் மோதிரம் அணிந்துகொண்டோரும், தேன் துளிக்கும் மாலையினரும்,
2.4

ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும் – பதி 30/28

ஒளிவிடும் நெற்றியையுடைய மகளிர் காலில் தண்டையோடு திரியும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *