சொல் பொருள்
கழிசடை என்பது உதிர்ந்த மயிர்!
கழிசடை – ஒதுக்கத்தக்கது
சொல் பொருள் விளக்கம்
தலையில் இருந்து மயிர் உதிர்வது உண்டு. சிலர்க்குச் சில காலங்களில் மிக உதிரும். அதனை மயிர் கொட்டுகிறது என்பர். ஆனால் தலையைச் சீவிச் சடை கட்டும்போது எவருக்கும் உதிர்வது காணக் கூடியது. தலையில் இருக்கும் அளவும் அதன் பெருமையென்ன? உதிர்ந்ததும் அது தன் மேலேயோ துணியிலேயோ பட்டால் அடையும் அருவெறுப்பென்ன? உணவில் கிடந்தால்? கழிசடை என்பது உதிர்ந்த மயிர்! தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர், நிலையின் இழிந்தக் கடை” என்பது வள்ளுவம். கழிசடை என்பது ஒதுக்கத்தக்கது ஒழிக்கத் தக்கது என்பதுடன் அவ்வாறு கீழானது என்பதையும் காட்டுவதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்