சொல் பொருள்
கழுதைப்பிறவி – சுமை சுமத்தல்
சொல் பொருள் விளக்கம்
கழுதையென்றால் பொதி சுமக்க வென்றே அமைந்த விலங்காதல் வெளிப்படை. அது போல் சிலர்க்கும் தாங்க மாட்டாக் குடும்பச் சுமை அமைந்து விடும்போது “கழுதைப் பிறவியாகி விட்டது’ சுமந்து தானே ஆகவேண்டும்; வேண்டா எனத் தள்ளினால் நம்மை விட்டு போகுமா”; என்று நொந்துரைக்கும் வழக்கு உண்டாயிற்று. சரி; சுமை தாங்க முடியாதென ஓடிவிடவேனும் முடியுமோ? அதுதான் காளில் தளை போடப்பட்டுள்ளதே! இவனுக்குத் தளை மனைவி மக்களாமே! தளை போடல் ‘காடு கட்டு’ ஆதலைக்காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்