சொல் பொருள்
கழுத்து ஒடிதல் – அளவில்லாத பொறுப்பு
சொல் பொருள் விளக்கம்
தாங்க மாட்டாத சுமையைத் தலைமேல் வைத்தால் தலை தாங்கிய பொருளைக் கழுத்துத் தாங்கமாட்டாமல் வளையும்; குழையும்; சுளுக்கும் உண்டாம். தலைமேல் உள்ள பொருளை அப்படியே தள்ளி விடவும் நேரும். அந்நிலையில் அத்தாங்க மாட்டாச் சுமையைக் கழுத்தை ஒடிக்கும் சுமை என்பர். அது போல் ஒருவர் குடும்பம் பெரிதாகி விட்டாலோ, பொறுப்பு அளவு கடந்து மிகுந்துவிட்டாலோ ‘கழுத்து ஒடிகிறது’ என்பது வழக்கு. தாங்க முடியாத அளவில்லாத பொறுப்பு என்பது பொருளாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்