1. சொல் பொருள்
(பெ) கவட்டை, கல்லை வீசி எறியும் பொறி,
2. சொல் பொருள் விளக்கம்
கவட்டை, கல்லை வீசி எறியும் பொறி,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
catapult
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1.இது ஒரு கல் வீசும் பொறியாகக் கோட்டையைத் தகர்க்கப் பயன்பட்டது ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை நார் அரி நறவின் கொங்கர் கோவே – பதி 88/18,19 பகைவரின் அரிய மதிலைச் சீர்குலைத்த கற்களை வீசியெறியும் கவணைப் பொறியையும், நார்க்கூடையால் வடிக்கப்பட்ட கள்ளையும் உடைய கொங்குநாட்டவர் அரசனே! 2.இது சிறுவர் பயன்படுத்தும் விளையாட்டுக்கருவி. விலங்குகளையும், பறவைகளையும் விரட்டப் பயன்படும் ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/13,14 தீயை உண்டாக்கும் தீக்கடைகோலையுடைய, கவணையும் வில்லையும் கையில் வைத்திருக்கிற தினைப்புனக் காவலர் உன்னை யானை என்று எண்ணிக்கொண்டு கூச்சலிடுவர்; 3.இது கவண் என்றும் கருதப்படும். பார்க்க கவண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்