சொல் பொருள்
1. (வி) தழுவு,
2. (பெ) 1. தழுவுதல், முயக்கம், 2. உள்ளீடு,
சொல் பொருள் விளக்கம்
தழுவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
embrace, embracing, the contents of something
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது – கலி 33/7 காதலர்கள் கூடிக்களித்தவராய், தழுவிய கைகளை நெகிழவிடாமல் இருக்க, நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663 (தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626 பூரணமாகிய உள்ளீட்டோடெ பிடித்த விதம்விதமான கொழுக்கட்டைகளையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்