Skip to content

சொல் பொருள்

(வி) 1. கிளைத்துப்பிரி, 2. சேர், 3. அணை, 4. அகத்திடு, கொண்டிரு

சொல் பொருள் விளக்கம்

கிளைத்துப்பிரி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fork, join with, embrace, contain within oneself

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2

புலியின் பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான்

பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் – பெரும் 243,244

எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைச்
சேர்த்துக்கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,

தான் அவள் சிறுபுறம் கவையினன் – ஐங் 404/2

தான் அவளின் முதுகினைத் தழுவுவான்

புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி – ஐங் 402/1

புதல்வனை அகத்திட்டுக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *