சொல் பொருள்
காச்சு(காய்ச்சு) – கஞ்சியைக் காய்ச்சு.
மூச்சு – பசியால் உயிர் போகிறது.
சொல் பொருள் விளக்கம்
பசித்துக் கிடக்கும் குழந்தைகள் கஞ்சிக்காகக் கத்தும் போது, “காச்சு மூச்சு என்று குழந்தைகள் கத்துகின்றன” என்பர். அக் கத்துதலால் வந்த வழக்கு ஒருவர் சாகக்கிடக்கும் போதோ, சண்டையின் போதோ பேரொலி கேட்குமானால் ‘காச்சுமூச்சு’ என்று கிடக்கின்றது என்று வழங்கலாயிற்று.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்