சொல் பொருள்
(பெ) 1. துணிகளுக்குப் போடும் சோற்றுக்கஞ்சி, 2. ஊறுகாய், 3. புளித்த நீர், 4. தொண்டை
புளிப்புப் பொருள்
தடுப்புப் பலகை
வண்டியில் மண், மணல் முதலியவை கொண்டு வரவைக்கப்படும் அணைப்பு காடி எனப்படுதலும் உழவர் வழக்கு
காடி என்பதற்கு வண்டி என்னும் பொருள் கொள்வது மலையகத் தமிழர் வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
புளிப்புப் பொருளில் காடி வருதல் பொதுவழக்கு. “உப்புக்கும் காடிக்கும் கூற்று” என்பது வள்ளுவம். “காடிக் கஞ்சியானாலும் மூடிக்குடி” என்பது பழமொழி. இனி, மாடு தின்பதற்காகப் போடப்படும் வைக்கோல் தடுப்புப் பலகையைக் காடி என்பதும், வண்டியில் மண், மணல் முதலியவை கொண்டு வரவைக்கப்படும் அணைப்பு காடி எனப்படுதலும் உழவர் வழக்கு. இது தென்னக வழக்காகும். காடி என்பதற்கு வண்டி என்னும் பொருள் கொள்வது மலையகத் தமிழர் வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gruel for stiffening the cloths, pickles, fermented rice water, throat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 134 கஞ்சி போட்டு வெளுக்கப்பட்ட துகிலின் விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து காடி வைத்த கலன் – பெரும் 56,57 வார்ப்பிணிப்பு இறுகின இனிய இசைக்கருவி(யான முழவை) ஒப்பக் கயிற்றால் (சுற்றிக்)கட்டி, ஊறுகாய் வைத்த பாத்திரம் தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி காடி வெள் உலை கொளீஇ – புறம் 399/2,3 பூணை சிறப்புற அணிந்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசியை புளித்த நீரை உலைநீராகக் கொண்ட அடுப்பில் ஏற்றி விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் பரல் வறை கருனை காடியின் மிதப்ப அயின்ற காலை – பொரு 114-116 விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும், பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி 115 உண்டபொழுதின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்