சொல் பொருள்
(மு.வி.மு) பார்த்துக்கொள்,
சொல் பொருள் விளக்கம்
பார்த்துக்கொள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
see to it
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இளமையும் காமமும் நின் பாணி நில்லா இடை முலை கோதை குழைய முயங்கும் முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை – கலி 12/12-14 இளமையும் இன்பநுகர்வும் உன் சொல்கேட்டு உனக்காகக் காத்திருக்கமாட்டா! முலையிடையே கிடக்கும் மாலை குழைந்துபோகும்படி தழுவிக்கொள்ளும் முறைமையினையுடைய நாட்கள் வீணே கழிந்துபோகாமல் பார்த்துக்கொள்வாய்! – காண் என்னும் முன்னிலை வினை காண்டை எனத் திரிந்தது.- நச்.விளக்கம் – காண்டை – பார்த்துக்கொள்: வினைத்திரிசொல் – பெ.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்