சொல் பொருள்
காது நீண்டு வளர்தலைக் காது வடிதல் என்பது குமரி மாவட்ட வழக்கு
சொல் பொருள் விளக்கம்
காது வடிதல் என்பது காதில் இருந்து நீர், சீழ் ஆகியவை வடிதல் எனல் பொதுவழக்கு. ஆனால் காது நீண்டு வளர்தலைக் காது வடிதல் என்பது குமரி மாவட்ட வழக்கு. கண்ணகியார் காதினை “வடிந்து வீழ் காதினள்” என்று இளங்கோவடிகள் கூறுவது எண்ணத்தக்கது. மதுரை, சிம்மக்கல்லை அடுத்துள்ள செல்வத்தம்மன் (கண்ணகி) சிலையைக் காண்பார் வடிந்து வீழ்காது காண்பார்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்