சொல் பொருள்
கானக்கரை என்பது சுடுகாடு என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்தில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
கானம் = காடு; கானக்கரை என்பது சுடுகாடு. கரை என்பது மேட்டிடம். கானக்கரை என்பது சுடுகாடு என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. ‘சுடலைக் கானம்’ என்பது மணிமேகலை. ‘சுடுகாட்டுக் கோட்டம்’ என்பதால் அது கோயிலாகக் கொள்ளப் பட்டமை புலப்படும். ‘காடும் கரையும்’ என்பது இணைச்சொல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்