சொல் பொருள்
(பெ) காமூர் என்பது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் எனத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சொல் பொருள் விளக்கம்
காமூர் என்பது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் எனத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சங்ககாலத்தில் காமூரை இடையர்களின் தலைவனான கழுவுள் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் ஒரு பெரிய கொடை வள்ளல் என்று மருதனிள நாகனார் என்னும் புலவர் பாடிச் சிறப்பித்துள்ளார் (அகம் 365) வேளிர் அரசர்கள் 14 பேர் ஒன்று திரண்டு கழுவுளைத் தாக்கியபோது காமூர் கலங்கியது போலத், தலைவனை நம்பிய நெஞ்சம் அவன் பிரிந்தபோது கலங்கியது எனப் பரணர் (அகம் 135)குறிப்பிடுகிறார். கழுவுள் அரசனின் குடிமக்கள் ஆனிரைகளை மேய்த்து வாழ்ந்துவந்தனர். இவர்கள் அண்டர் என்று குறிப்பிடப்படுகின்றனர், பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் இவர்களின் ஊரைப் பாழாக்கினான் அடு போர் வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை ஈரெழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போல மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/10-14 அடும் போரினையும் நீங்காத சிறந்த புகழினையும் வானை அளாவிய பெரிய குடையினையும் உடைய பதினான்கு வேளிர் ஒருங்குகூடித் தாக்கியதுமாகிய கழுவுள் என்பானது காமூரைப் போல கலங்கா நின்றது அவரைப் பிரியாரென்று தெளிவுற்றிருந்த என் மனம். வென் வேல் மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் – அகம் 365/11,12 வென்றி வேலினையும் சிறந்த வண்மையினையும் உடைய கழுவுள் என்பானது காமூராகிய அவ்விடத்து பார்க்க கழுவுள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்