சொல் பொருள்
வேக்காட்டில் பாகாகக் காய்ச்சப்படும் பொருள் மிகு கெட்டியாகிப் பதன் கெட்டுப் போதலைக் காம்புதல் என்பது தென்னக வழக்கு
சொல் பொருள் விளக்கம்
வேக்காட்டில் பாகாகக் காய்ச்சப்படும் பொருள் மிகு கெட்டியாகிப் பதன் கெட்டுப் போதலைக் காம்புதல் என்பது தென்னக வழக்கு. இறுகியும் சுவைமாறியும் கும்பிப்போன மணம் கொண்டும் இருக்கும் அதனைக் கும்புதல் என்பதும் உண்டு. கருப்புக் கட்டி காம்புகிறது கும்பிப் போய்விட்டது என்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்