1. சொல் பொருள்
(பெ) கடல் சார்ந்த ஏரி, உப்பளம், கழி, கழிமுகம், கடலில் இருந்து பின்வரும் உப்பு நிறைந்த நீர்ப்பாயும் ஆற்றுப்பகுதி.
காயல் என்பது காய்தல் இல்லாத இடம் என்னும் பொருளது. நீர்வளம் உடைமையால் ஏரி, குளம் என்பவை காயல் எனப்பட்டு, அவற்றையுடைய ஊர்க்கு ஆயன.
2. சொல் பொருள் விளக்கம்
காயல் என்னும் பெயருடைய ஊர்கள் தென்னகத்தில் பல உண்டு. புன்னைக் காயல், மஞ்சள் நீர்க் காயல்; இனி காயல் பட்டினம் உண்டு. அது முன் அடையாகக் காயல் கொண்டது. காயல் என்பது காய்தல் இல்லாத இடம் என்னும் பொருளது. நீர்வளம் உடைமையால் ஏரி, குளம் என்பவை காயல் எனப்பட்டு, அவற்றையுடைய ஊர்க்கு ஆயன. காயல் என்பதற்கு ஏரி என்னும் பொருள் குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. சென்னையில் ‘காயலாங்கடை’ என வழங்குகிறதே. காயல் என்னும் ஊரில் இருந்து சென்னையில் குடியேறிய வணிகர் கடை அது. பழைய இரும்பு வணிகம் செய்ததால் அவ்வணிகம் காயலாங்கடை எனப்பட்டது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
bird
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் – அகம் 366/5
உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் இடமெல்லாம் மறையும்படி பரந்து விழுந்ததால்
காயல் வேய்ந்த தேயா நல் இல் – அகம் 370/5
காய்ந்த புல் வேய்ந்த புதிய நல்ல இல்லத்தில்
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்