சொல் பொருள்
காயா? – பழமா? தோல்வியா? வெற்றியா?
சொல் பொருள் விளக்கம்
காய் முதிரா நிலை; பழம் முதிர்நிலை; ஒரு செயல் நிறைவேறலைப் பழுத்தல் என்பது குறித்தது. “தானே பழுக்காததைக் தடிகொண்டு பழுக்கவைத்தது போல” என்னும் பழமொழி பழத்திற்கு நிறைவேற்றல் பொருளுண்மை தெளிவிக்கும். காயைப் பழுக்க வைக்கப் பலவகை முயற்சிகள் வேண்டும்; காத்திருக்கவும் வேண்டும். காலத்தால் பயன் கொள்ள நேராமலும் போய்விடும். ஆனால் பழமென்றால் உடனே பயனாகிவிடுமே! அக்கருத்திலேயே செயல் நிறைவேறி உடன் பயன்படுதலைப் பழம் என்றும், நிறைவேறாமல் தடைப்பட்டு நிற்பதைக் காயென்றும் சொல்லும் வழக்கமாயிற்று. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தலைக் கூறும் திருக்குறளை அறிக.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்