சொல் பொருள்
காலைச் சுற்றல் – நெருக்கி வளைத்தல்
சொல் பொருள் விளக்கம்
கொடி காலைச் சுற்றும்; வைக்கோற் புரி, கயிறு ஆகியவையும் காலைச் சுற்றும். சில வகைப் பாம்புகளும் தீண்டிவிட்டு ஓடாமல் காலைச் சுற்றிக்கொள்ளுதல் உண்டு. “காலைச் சுற்றியது கடியாமல் விடாது” என்பது பழமொழி. காலைச் சுற்றுதல் என்பது நெருங்கி வருதலையும், சுற்றி வளைத்தலையும் குறிப்பதாக விரிவடைந்தது. சிலர்க்கு இரக்கத்தால் உதவினால் அவ்வுதவியளவில் நில்லாமல் மேலும் மேலும் எதிர்பார்த்தும், தங்களுக்கு உதவுதல் அவர்கட்குக் கட்டாயக்கடமை போலவும் வலியுறுத்திப் பெறுவர். இத்தகையவர்கள் உறவினைக் காலைச் சுற்றியது என்பது வழக்காயிற்று. சுற்றம் என்னும் சொல்லும் எண்ணத் தக்கதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்