சொல் பொருள்
(வி) ஓடு, எழுச்சியுடன் செல், நடமாடித்திரி,
சொல் பொருள் விளக்கம்
ஓடு, எழுச்சியுடன் செல், நடமாடித்திரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
run, set out on a mission with zeal, roam about
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல் – அகம் 45/16 கடலில் வந்த பகைவர்கள் தோற்று ஓடும்படியான வெற்றியையுடைய நல்ல வேல் கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் – பெரும் 21 ‘கல்’என்ற ஒலியை எழுப்பும் சுற்றத்தாருடன் எழுச்சியுடன் சுற்றித்திரியும் கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே – நற் 255/1 பேய்கள் நடமாடித்திரிய ஊர் உறங்கிற்று.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்