சொல் பொருள்
கால்வழி – மக்கள்
சொல் பொருள் விளக்கம்
கான்முளை என்பதும் இப்பொருளதே. கால்வழி என்பது வாழையடி வாழையென வரும் மரபுத் தொடர்ச்சியாகும். கால் என்பதற்கு ஊன்றுதல் முளைத்தல் எனப் பலபொருள்கள் உண்டு. இங்குக் ‘கால்’ குடும்பத்திற்கு ஊன்றுதலாக வாய்த்த மக்களைக் குறித்து நின்றது. ஆலமரத்தில் அடிமரம் இருந்தாலும் கிளைகளில் இருந்து இறங்கும் வீழ்த்தும் ‘கால்’ ஆகி மரத்திற்கு உதவும். அதுபோல் கால் முளையும் குடியைத் தாங்கும். குடும்பத்தை வழி வழி நிலை பெறுத்தி வருபவர் மக்கள். ஆதலால் அவர்கள் கால்வழி கான்முளை எனப்பட்டனர் என்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்