சொல் பொருள்
காவணம் என்பது திருமண மேடைகுறிக்கும் சொல்லாகப் பாலமேடு வட்டார வழக்கில் உள்ளது. செட்டிநாட்டு வழக்கிலும் உண்டு
காவணம் – திருமணக்கொட்டகை
சொல் பொருள் விளக்கம்
பந்தல் என்பது பொதுச்சொல். பொலிவுறுத்துதல், தொங்கல் ஒப்பனை அற்றது. ஆனால் காவணம் பொலி வுற்றது. தொங்கல் ஒப்பனை உற்றது. காவணம் என்பது திருமண மேடைகுறிக்கும் சொல்லாகப் பாலமேடு வட்டார வழக்கில் உள்ளது. செட்டிநாட்டு வழக்கிலும் உண்டு. மணப்பந்தல் என்பது வெளிப்பட மங்கல விழா நிகழிடம் காட்டும். பந்தல் அவ்வாறு காட்டாது தண்ணீர்ப்பந்தல், கொடிப்பந்தல் என்பனவும் உண்டு.
திருமணம் திருவிழாக்கள் நிகழுகின்றன என்றால் அதற்கு முன்னறிவிப்பு பந்தலாக விளங்குகின்றது. “விரித்த பந்தர் பிரித்ததாமென’ எனக் கம்பரால் குறிக்கப்படுகிறது பந்தல். எனினும், பந்தல், துன்ப நிகழ்வுக்கு உரிதெனக் கருதப்படுவதும் உண்டு. இறப்புக்குப் போடுவது பந்தர் எனவும் சிறப்புக்குப் போடுவது காவணம் எனவும் செட்டி நாட்டு வழக்காக உள்ளது. காவாவது பூங்கா; வணம் ஆவது வண்ணம். வாழை முதலிய மரங்களும் பூக்களும் பொதுளியது காவணம் என்க. பந்தர் பார்க்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்