சொல் பொருள்
குற்றால வட்டாரத்தில் காவுதல் என்பது தாங்குதல் பொருளில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
“காவினேம் கலமே” என்பது புறநானூறு. ஒளவையார் சொல் காவுதல் = தாங்குதல்; கலம் = யாழ். குற்றால வட்டாரத்தில் காவுதல் என்பது தாங்குதல் பொருளில் வழங்குகின்றது. காவட்டு, காவடி, காவி என்பவை தாங்குதல் பொருள் உடையவை. பிறர் துயர் தாங்குதல் அடையாளச் சான்றாகக் கொண்ட காவி, எண்ணம் இலாரால் வண்ண அளவில் பொருள் அமைந்து விட்டது. எண்ணத்தொடு கூடிய வண்ணம் “தவமும் தவமுடையார்க்கு ஆகும்” என்று பாராட்டப்படும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்