சொல் பொருள்
(பெ) 1. நிலப்பரப்பு,
2. ஒரு பொருள் அமைந்திருக்கும் நிலை
3. படுத்திருக்கும் நிலை,
சொல் பொருள் விளக்கம்
நிலப்பரப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
long stretch of land
being in a certain state
recumbent posture
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரை பிறழிய இரும் பௌவத்து கரை சூழ்ந்த அகன் கிடக்கை – பொரு 178,179 திரை முரிந்த கரிய கடலின் கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில், முருகு அமர் பூ முரண் கிடக்கை – பட் 37 மணம்பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடக்கும் நிலை மறி இடைப்படுத்த மான் பிணை போல புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது மன்ற அவர் கிடக்கை – ஐங் 401/1-3 குட்டியினை நடுவில்போட்டுப் படுத்த ஆண்மானும், பெண்மானும் போல தம் மகன் நடுவில் இருக்க, மிகவும் இனிமையானது, உண்மையாகவே, அவர்கள் படுத்திருப்பது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்