Skip to content

சொல் பொருள்

(பெ) ஆழமான பள்ளம், அகழி,

சொல் பொருள் விளக்கம்

ஆழமான பள்ளம், அகழி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

trench, moat, ditch

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எழுது எழில் சிதைய அழுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தை_வாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன – நற் 379/6-9

மை தீட்டிய கண்களின் அழகு குலைந்துபோகுமாறு அழுத கண்கள்,
தேர்களை இரவலர்க்கு வழங்கும் சோழரின் குடவாயில் என்னும் ஊரில் உள்ள
மழைபெய்து நிரம்பிய அகழியில் குளிர்ச்சியாக மலர்ந்த
மழைநீரை ஏற்ற நீலமலரைப் போல ஆயின;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *