Skip to content

கிட்ட முட்ட

சொல் பொருள்

கிட்ட – கிட்டத்தில் அல்லது நெருக்கத்தில்
முட்ட – கண்ணுக்குப் படுமாறோ காதுக்குப் படுமாறோ உள்ள தொலைவில்.

சொல் பொருள் விளக்கம்

‘போனவன் கிட்ட முட்டத் தெரியவில்லை’ ‘வண்டி கிட்ட முட்டத் தெரியவில்லை’-இன்னவாறு ‘கிட்ட முட்ட’ வழங்கப்படுகின்றது.

கிட்டுதல்-நெருங்குதல், ‘கிட்டத்து வீட்டுக்காரர் எட்டத்து வீட்டுக்காரர் என்பவை சொல்லப்படுபவை. ‘கிட்டிபோட்டு இறுக்குதல்’ என்பதும் வழக்கு.

முட்ட என்பது ஒலி, ஒளி முதலியவை முட்ட என்பதாம்.

‘கிட்டத்துறவு முட்டப் பகை’ என்பது இணைச் சொல்லையும் விளக்கும் பழமொழி.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *