சொல் பொருள்
(வி) 1. ஒளிவிடு, 2. பொங்கியெழு, 3. மிகு, 4. உயர், மேலெழு, 5. வளர்,
சொல் பொருள் விளக்கம்
ஒளிவிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shine, to be conspicuous, resplendent, swell upwards, be intense, abundant, increase, spring up, shoot up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் – சிறு 61 ஒளிவிடுகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும் கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண் – புறம் 295/1 கடல் பொங்கி எழுந்ததைப் போன்ற பாசறையின் நடுவில் புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 166 தனிமையொடு கிடக்கும் அன்பு மிகுகின்ற இளம்பெண்ணுக்கு அரவு கிளர்ந்து அன்ன விரவு_உறு பல் காழ் வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து_இழை அல்குல் – நற் 366/1-3 பாம்பு படமெடுத்து உயர்ந்ததைப் போன்ற, வேறுபட்ட பலவான மணிகளைக் கோத்து நெகிழ உடுக்கப்பட்ட நுண்ணிய ஆடை இடையிடையே வந்து பளிச்சிடும் திருத்தமான அணிகலன் அணிந்த அல்குலையும் கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1 கிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிட அதில் செழித்து வளர்ந்த கோரைப்புல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்