சொல் பொருள்
கிளித்தல் என்பது வசை; வசவுச் சொல்
சொல் பொருள் விளக்கம்
கிழித்தல் என்பது இல்லை கிளித்தல். “அவனை நேற்றுக் கிளி கிளியாகக் கிளித்தும் சூடு சொரணை இல்லை” என்பது பழிப்புச் சொல். கிளித்தல் என்பது வசை; வசவுச் சொல். கிளி சொல்லியதைத் திரும்பச் சொல்லுதல் போல் பல்கால் சொன்ன வசையைச் சொல்லல். கிளத்தல் = பேசுதல். கிளித்தல், வைதல். இது நெல்லை, முகவை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்