சொல் பொருள்
(பெ) சோழமன்னருக்குரிய பெயர்களில் ஒன்று,
சொல் பொருள் விளக்கம்
சோழமன்னருக்குரிய பெயர்களில் ஒன்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one of the names for the chozha kings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி – நற் 141/9,10 உயர்ந்த கோடுகளையுடைய யானைப்படை உடைய புகழே விரும்பும் சோழனான கிள்ளி – கிள்ளி சோழனது பெயர். கிள்ளி என்ற பெயரையுடைய சோழமன்னர் பலர் இருந்திருத்தலின் இக் கிள்ளி இன்னான் என்பது விளங்கவில்லை – ஔவை.சு.து.விளக்கம் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை – நற் 390/3,4 வள்ளல்தன்மை உடைய கிள்ளிவளவனின் வெண்ணி என்னும் ஊரைச் சூழவுள்ள வயல்களிலுள்ள வெள்ளாம்பலின் அழகான மடிப்புகளையுடைய தழையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்