சொல் பொருள்
கிழிகிழி என்று கிழித்தல் – வசை கூறல்
சொல் பொருள் விளக்கம்
கிழி என்பது துணி. கிழியஞ்சட்டி என்பதும், பொற்கிழி என்பதும் துணியென்னும் பொருள் தரும் கிழி வழிப்பட்டனவே. கிழிப்பதால் கிழி எனப்பட்டது. அறுவை, துணி என்னும் சொற்களையும் எண்ணுக. துணியைக் கிழிப்பதுபோல், மானம் கெடப் பேசுதலைக் கிழித்தல் என்பது குறித்தது. மானம் போர்வை, சட்டை போல்வது. போர்த்து மூடும் அதனைக் கிழிப்பதுபோல மானப் போர்வையை அல்லது சட்டையைக் கிழித்து ஊருக்கு இழிவு வெளிப்படச் செய்வது ‘கிழி’ யாயிற்று. கிழித்தலும் ஆயிற்று, பல்கால், பல்வகையில் மானங்கெடப் பேசுதல் ‘கிழி கிழி’ என அடுக்காயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்