சொல் பொருள்
குச்சு – குடிசை வீடு.
மச்சு – மாடி வீடு.
சொல் பொருள் விளக்கம்
குச்சு – ‘குச்சில்’ என்றும் கூறப்படும். ஓலைக் கொட்டகையோ, கூரைக் குடிசையோ ‘குச்சு’ ஆகும். பூப்படைந்த பெண்களைப் புதுக் கொட்டகையில் இருக்க வைப்பர். அதற்குக் குச்சில் என்பது பெயர். “குச்சிலுக்குள் இருக்கிறாள்” எனப் பூப்பானவளைக் குறிப்பது சிற்றூர் வழக்கு.
மச்சு ‘மெச்சு’ என்றும், ‘மெத்து’ என்றும் ‘மெத்தை’ என்றும் வழங்கப்படும். “கழுதை கிடப்பது தெருப்புழுதி, கனாக்காண்பது மச்சுமாளி” என்பது பழமொழி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்