சொல் பொருள்
(பெ) 1. வளைவு, 2. குடவாயில், குடவாசல்
சொல் பொருள் விளக்கம்
வளைவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bend
the city called kudavAyil
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறு விழி கண்ண கூரல் அம் குறுமுயல் ————————– —————————– குடந்தை அம் செவிய – அகம் 284/2-4 குறிய விழி பொருந்திய கண்களையும் கூரிய மயிரினையுமுடைய குறிய முயல்கள் —————- ————————– வளைந்த அழகிய செவியினவாகி குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட – புறம் 321/5 வளைந்த அழகிய காதுகளையுடையவாகிய கொல்லை வரப்பில் வாழும் எலியை அலைக்க குடவாசல் (Kodavasal), திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டம் மற்றும் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.இங்கு குடவாசல் கோணேசுவரர் கோயில் உள்ளது. கொற்ற சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய அரும் கடி படுக்குவளறன் இல் யாயே – அகம் 60/13-15 வெற்றிபொருந்திய சோழர் குடவாயிற்கண் போற்றி வைத்த பகைவர் நாடு திறையாகக் கொடுத்தநிதியைக் காட்டினும் மிகவும் அரிய காவற்படுத்திவிடுவாள் அறம் கருதாத என் தாய் குடவாயில் என்பது குடந்தை ஆனது. ‘குடவாயில் என்பதனைக் கொற்றச் சோழர் குடந்தை வைத்த’ எனவும் ———, மேலையோர் திரித்தவகையானே இக்காலத்தும் திரித்துக்கொள்ளப்படுவன – பேராசிரியர் – தொல்காப்பியம். உரை – தொல்.செய்.80
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்