சொல் பொருள்
குடலை உருவல் – படாத்துயர்படுத்தல், வசையால் வாட்டல்,
சொல் பொருள் விளக்கம்
“நீ சொல்வதோ செய்வதோ பெரியவருக்குத் தெரிந்தால் போதும் குடலை உருவி மாலை போட்டுவிடுவார்” என்பதில் உள்ள குடலை உருவல் அச்செயல் செய்வதைக் குறிப்பதில்லை. குடலை உருவுவது போலக் கொடுமைப்படுத்துவார் என்றும் தன்குடலைத் தானே உருவுமாறு வசை பொழிவர் என்றும் கொள்ள வேண்டிய வழக்காம். குடலை உருவுதல் புலவூணியர் செய்வன. இக்குடலை உருவுதலோ சீற்றமிக்கார் எவரும் செய்வன.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்