சொல் பொருள்
குடுமியைப் பிடித்தல் – அகப்படுத்தல்
சொல் பொருள் விளக்கம்
சண்டையில் ஒன்று குடுமிப்பிடிச் சண்டை. வளர்ந்த குடுமியைப் பற்றிப் பிடித்துக் கொண்டால், படாப்பாடு படுத்தி விடமுடியும். ஆதலால் குடுமியைப் பிடிக்க இடந்தருதல் இல்லை. குடுமியைப் பிடித்தல் ஆகாது என்பதும், குடுமி அவிழ்ந்தவன் அதனைக் கட்டும் வரை அவனொடு போரிடக் கூடாது என்பதும் முன்னையோர் போர் முறை. குடுமியைப் பிடித்துக் கொண்டவன் விரும்பியபடியெல்லாம் ஆட்டி அலைக்கழிப்பது போலச் சிலவகை எழுத்துகள், கமுக்கச் செய்திகள் கிடைத்துவிட்டால் அவற்றைக் கொண்டு அலைக்கழிக்கும் கொடுமை நிகழ்த்துவர். அத்தகையவர். “உன் குடுமி என் கையில் இருக்கிறது. அங்கே இங்கே திமிர முடியாது” என்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்